ஏரல்: சுகாதார நடைபயணம்
சுகாதார நடைபயணம் நடந்தது
ஏரல்:
உமரிக்காடு பஞ்சாயத்தில் அமிர்த துளி சுகாதார நடைபயணம் நடந்தது. இதற்கு பஞ்சாயத்து தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்பு தலைவருமான எஸ்.ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், அன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நடைபயணத்தில் சுகாதார அலுவலர் சாம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி, என்ஜினீயர் ரவி, பஞ்சாயத்து செயலாளர் வாசுதேவன், மகளிர் கூட்டமைப்பு தலைவர் கீதா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பன்னீர்செல்வி, ஆசிரியர் ஜான்சன், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி அமைப்பாளர், வார்டு கவுன்சிலர் ஷங்கர், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story