புருஷோத்தம பெருமாள் கோவிலில் சாற்றுமுறை பாராயணம்


புருஷோத்தம பெருமாள் கோவிலில் சாற்றுமுறை பாராயணம்
x
தினத்தந்தி 7 April 2022 10:56 PM IST (Updated: 7 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

புருஷோத்தம பெருமாள் கோவிலில் சாற்றுமுறை பாராயணம் நடைபெற்றது

திருவெண்காடு
திருவெண்காடு அருகே உள்ள நாங்கூரில் பிரசித்தி பெற்ற வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் உலக நன்மைக்காக திவ்ய பிரபந்தங்கள், வேத பாராயணம் உள்ளிட்ட சாற்று முறை பாராயணம் நடந்தது. இதில், திரளான பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு பாராயணம் செய்தனர்.. இதனையொட்டி பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார்.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் கிருஷ்ணமாச்சாரி, ரங்கநாதன் மற்றும் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story