பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 7 April 2022 11:13 PM IST (Updated: 7 April 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் அறிவு என்கிற அறிவழகன் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 2 நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்குகள், 9 வழிப்பறி கொள்ளை வழக்குகள், 3 தகராறு வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளது. இவற்றில் 13 வழக்குகளில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ரவுடி அறிவழகனை விழுப்புரம் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித்தொழிலாளியான சபாபதி (35) என்பவரை அறிவழகன் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது அவ்வழியாக ரோந்து வந்த கண்டமங்கலம் போலீசார், அறிவழகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் அறிவழகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து அறிவழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கண்டமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story