சாக்குமூட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு வழக்கில் வாலிபர் கைது

சாக்குமூட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு வழக்கில் வாலிபர் கைது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை,

சாக்குமூட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு வழக்கில் வாலிபரை கைது செய்தனர். தன்னுடன் தொடர்பை துண்டித்ததால் கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இளம்பெண் உடல் மீட்பு

மும்பை வெர்சோவா கடற்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாக்குமூட்டையில் இளம்பெண் உடலை போலீசார் மீட்டனர். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இளம்பெண் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரித்தனர். இதில் கோரேகாவ் குடிசை பகுதியை சேர்ந்த சோனல் சுக்லா (வயது19) என்பது தெரியவந்தது.

போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கொன்ற ஆசாமி யார் என செல்போன் மூலம் அழைப்புகளை கொண்டு விசாரித்தனர்.

வாலிபர் கைது

இதில், இளம்பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்த கோரேகாவ் பிரேம் நகர் பகுதியை சேர்ந்த முகமது சாகேஷ் அன்சாரி (23) என்பவர் தான் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தில் அவர் தான் இளம்பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி உடலை வீசி சென்றதை ஒப்புக்கொண்டார். 2 பேரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென இளம்பெண் சோனல் சுக்லா அவரது தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கேபிள் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com