திந்திரிணீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா


திந்திரிணீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா
x
தினத்தந்தி 7 April 2022 11:16 PM IST (Updated: 7 April 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டிவனம், 

திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பின்னர் சூரிய பிரபை, சந்திரப்பிரபை ஆகிய வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.  விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்திரசேகர் பவளக்கால் வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் அன்ன வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) அதிகார நந்தி வாகனத்திலும், மாலையில் பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்திலும், 10-ந் தேதி சந்திரசேகர் நாக வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் காமதேனு வாகனத்திலும்,11-ந் தேதி சந்திரசேகர் பவளக்கால் விமான வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் ரிஷபம் வாகனத்திலும், 12-ந் தேதி சந்திரசேகர் பவளக்கால் விமானத்திலும், பஞ்சமூர்த்திகள் யானை வாகனத்திலும், 13-ந் தேதி சந்திரசேகர் பவளக்கால் விமானத்திலும் விதியுலா நடக்கிறது. 14-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி விமரியைாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். 

Next Story