போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்
x
தினத்தந்தி 7 April 2022 11:20 PM IST (Updated: 7 April 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிவதாகவும், அவற்றால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் கமிஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் சென்றன. 

அவரது உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று வேலூர் பழைய பஸ்நிலையம், மண்டித்தெரு, கலெக்டர் அலுவலகம் அருகே, சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்தனர்.

 மேலும் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story