பெண் தூக்கு போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது


பெண் தூக்கு போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது
x
தினத்தந்தி 7 April 2022 11:26 PM IST (Updated: 7 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே பெண் தூக்கு போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு

ஆற்காடு அருகே பெண் தூக்கு போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது செய்யப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த புவனா (28) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் ஆற்காடு அருகே உள்ள அரப்பாக்கம் சிவராஜ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த புவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கணவன் கைது

இதுகுறித்து புவனாவின் தந்தை சொக்கலிங்கம் ரத்தினகிரி போலீசில் புகார் அளித்தார். அதில் புவனாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வந்தார். 

இதில் சதீஷ் புவனாவின் நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த நகையை மீட்பதற்காக புவனா சீட்டு கட்டி சேமித்து வைத்த பணத்தையும் சதீஷ் கேட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த புவனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

இதனைத்தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் சதீஷை ரத்தினகிரி போலீசார் கைது செய்தனர்.

Next Story