குற்ற வழக்குகளில் ஆஜராகாத நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு `பிடிவாரண்டு'


குற்ற வழக்குகளில் ஆஜராகாத நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு `பிடிவாரண்டு
x
தினத்தந்தி 7 April 2022 11:34 PM IST (Updated: 7 April 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

குற்ற வழக்குகளில் ஆஜராகாத நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு `பிடிவாரண்டு'

குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சுரேஷ்குமார். இவர் தற்போது நெல்லை மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு குமாரபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நகைபறிப்பு மற்றும் பண மோசடி ஆகிய 2 குற்ற வழக்குகளின் விசாரணைக்கு குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சப்னா பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
1 More update

Next Story