ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
பல்லடம் அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பல்லடம்
பல்லடம் அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தங்க சங்கிலி பறிப்பு
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி பிரிசில்லா (வயது 35). இவர் பல்லடம் அருகே முத்தாண்டிபாளையத்தில் மருந்துக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை காரணம்பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
ஆறாக்குளம் பகுதியில் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று பிரிசில்லாவை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிசில்லா செய்வதறியாமல் திகைத்தார். அதற்குள் அந்த ஆசாமிகள் பிரிசில்லா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
போலீசில் புகார்
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் பிரிசில்லா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அவர்களை தேடி வருகிறார்கள். ஸ்கூட்டரில் தனியாக வந்த பெண்ணை வழிமறித்து மோட்டார்சைக்கிளில் வந்த ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story