அரூர் அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய 4 பேர் கைது
அரூர் அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்:
அரூர் அருகே உள்ள மோப்பிரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். சொட்டுநீர் பாசன கருவிகளை விற்பனை செய்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை போட்டு வைத்திருந்தார். அதை அரூரை சேர்ந்த கார்த்தி (வயது 21) மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து திருடி சென்று அருகே உள்ள புதரில் மறைத்து வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி மற்றும் 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story