வே.முத்தம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வே.முத்தம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 April 2022 12:09 AM IST (Updated: 8 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

வே.முத்தம்பட்டி பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மொரப்பூர்:
கடத்தூர் மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வே.முத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் சீரான, தங்குதடையற்ற மின்சாரம் வழங்கும் பொருட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பி.சி.பட்டி மின் பாதையில் விஸ்தரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், மணிப்புரம், ரேகடஅள்ளி, கொண்டகரஅள்ளி, திப்பி ரெட்டி அள்ளி, ஜாலியூர், வத்தல்மலை சுங்கரஅள்ளி, சுரைக்காய்பட்டி, நத்தமேடு, மோட்டாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story