கலவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்


கலவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 8 April 2022 12:19 AM IST (Updated: 8 April 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

கலவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பெருந்தேவி தாயார் சமேத கரி வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சி பெரியவர் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்த பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலையில் நடந்தது.

 தொடர்ந்து மாலையில் அன்ன வாகனத்தில் பெருமாள் அலங்காரத்துடன் நகர வீதியில் செண்டை மேளம் முழங்க வீதி உலா வந்தார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 
இதில், உபயதாரர்கள், திருமஞ்சன கமிட்டி உறுப்பினர்கள், பஜனை குழு உறுப்பினர்கள், புரட்டாசி மாத சனிக்கிழமை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story