100 டன்னுக்கும் கீழ் காய்கறிகள் வரத்து குறைந்தது
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து 100 டன்னுக்கும் குறைவாக உள்ளது. விற்பனையும் இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூ:
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து 100 டன்னுக்கும் குறைவாக உள்ளது. விற்பனையும் இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காமராஜர் மார்க்கெட்
தஞ்சை காமராஜர் மார்க்கெட் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டப்படுவதால் அரண்மனை வளாகத்தில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி தற்போது தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு மொத்த கடைகள், சில்லறை விற்பனை கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிகமாக தகரத்தினால் ஆன கூரை அமைக்கப்பட்டு கடைகள் செயல்பட்டு வருகிறது.
தினமும் 200 டன் காய்கறிகள்
தஞ்சை மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதன்படி அரண்மனை வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்ட போது தினமும் 200 டன் காய்கறிகள் கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டுவரப்படும். அதன்படி வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
தற்காலிக மார்க்கெட்டுக்கு இடம் பெற்றதில் இருந்து வியாபாரமும் பாதிக்கப்பட்டதால் கொள்முதலும் குறைந்து விட்டது. அதன்படி தற்போது தினமும் 75 முதல் 100 டன் வரை தான் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. அதுவும் விற்பனையாவது இல்லை. இதனால் வியாபாரிகளும் காய்கறிகள் கொள்முதலை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறார்கள். மொத்த வியாபாரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது என்று இல்லாமல் சில்லறை வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், காய்கறிகள் அழுகும் பொருட்கள் என்பதால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியாபாரிகள் பாதிப்பு
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கும் வந்ததால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆங்காங்கே புதிதாக காய்கறிகள் கடைகள் தொடங்கப்பட்டதாலும் மார்க்கெட்டில் விற்பனை வெகுவாக குறைந்தது. இதனால் தினமும் 200 டன் கொள்முதல் செய்து வந்த வியாபாரிகள் தற்போது 100 டன்னுக்கும் குறைவாகத்தான் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. காய்கறிகள் அழுகும் பொருட்கள் என்பதால் இருப்பு வைக்க முடியாது. எனவே எப்படியாவது விற்று தீர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதனால் வியாபாரிகளுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது”என்றனர்.
Related Tags :
Next Story