பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
பழுதடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்,
புன்னம் சத்திரத்திலிருந்து காகித ஆலைக்கு செல்லும் சாலையில் புகழூர் ரெயில்வே பாதை செல்கிறது. ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கும், கவுண்டன்புதூர், செட்டி தோட்டம், நடையனூர், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழியாக கரூர் செல்வதற்கும், காகித ஆலை செல்வதற்கும், புன்னம்சத்திரம் பகுதிக்கு செல்வதற்கும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் மண்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குழி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story