நவீன தொழில்நுட்ப எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
நவீன தொழில் நுட்ப எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
சேலம்:-
நவீன தொழில் நுட்ப எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
நவீன தொழில் நுட்பங்கள்
வேளாண்மை திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள், நவீன தொழில்நுட்ப எந்திரங்களை பயன்படுத்த வேளாண்மை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனிக்கவனம் செலுத்த வேண்டும்
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளின் முளைப்புத் திறன் தரச்சான்று வழங்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள் உள்ளிட்டவைகளுக்குரிய விதைகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story