அரபிக்கடலில் மூழ்கி கேரள மாணவர்கள் 3 பேர் சாவு
உடுப்பியில் அரபிக்கடலில் மூழ்கி கேரள மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
மங்களூரு:
கேரள மாநிலம் கோட்டயம் மங்களம் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 80 மாணவர்கள் 2 பஸ்களில் கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் உடுப்பி அருகே மல்பே கடற்கரையில் அரபிக்கடலில் நீச்சலடித்து குளித்து கெர்ண்டிருந்தனர். அப்போது அல்லேன் ரெஜ்ஜி என்ற மாணவர் ராட்சத அலையில் சிக்கி கடலில் தத்தளித்தார். இதை பார்த்த அவரது நண்பர்களான அமல், அனில் ஆகியோர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் 3 பேரையும் அப்பகுதி மீனவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுற்றுலா வந்த இடத்தில் கேரளாவை சேர்ந்த 3 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story