மாமியாரை வெட்டி கொன்ற மருமகன் கைது


மாமியாரை வெட்டி கொன்ற மருமகன் கைது
x
தினத்தந்தி 8 April 2022 2:38 AM IST (Updated: 8 April 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.

ிருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி காளியம்மாள் (வயது 48). இவர்களது மகள் ஜெயா என்கிற ஜெயக்கொடி (30). இவருக்கும் கூடகோவில் அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (34) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக முனியாண்டி மாமியார் காளியம்மாள், மனைவி ஜெயாவை அரிவாளால் வெட்டினார். இதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஜெயா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.


Next Story