நடிகர் வடிவேலு சினிமாப்பட பாணியில் கடையில் பணம் திருடிய வாலிபர்


நடிகர் வடிவேலு சினிமாப்பட பாணியில் கடையில் பணம் திருடிய வாலிபர்
x
தினத்தந்தி 8 April 2022 2:41 AM IST (Updated: 8 April 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் வடிவேலு சினிமாப்பட பாணியில் மளிகை கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து ரூ.22 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் திருடி சென்ற ருசிகர சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.

நெல்லை:
காமெடி நடிகர் வடிவேலு நடித்த ஒரு சினிமாப்படத்தில், அவர் கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து அங்கிருந்த தராசு படிக்கற்களை திருடி செல்வது போன்ற காட்சி அமைந்திருக்கும். அநத காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  அதேபோல் கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து வாலிபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற ருசிகர சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.  அதுபற்றிய விவரம் வருமாறு:- 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கலை கோவில் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் கணேசனிடம், எனக்கு அரிசி மூட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே கணேசன் அரிசி மூட்டையை எடுப்பதற்காக கடையில் உள்ள வேறு ஒரு அறைக்கு சென்றார்.

அப்போது அந்த வாலிபர் கடையின் எடை எந்திரத்தில் இருந்த ரூ.22 ஆயிரத்தை நைசாக திருடிக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். கணேசன் அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் அங்கு அந்த வாலிபர் இல்லை. அவர் கடையில் இருந்த ரூ.22 ஆயிரத்தை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணேசன் சிவந்திபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story