பெங்களூரு-தர்மபுரி இடையே இன்று முதல் மெமு ரெயில் சேவை


பெங்களூரு-தர்மபுரி இடையே இன்று முதல் மெமு ரெயில் சேவை
x
தினத்தந்தி 8 April 2022 2:51 AM IST (Updated: 8 April 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-தர்மபுரி இடையே இன்று முதல் மெமு ரெயில் சேவை தொடங்குகிறது.

பெங்களூரு:

  பெங்களூரு-தர்மபுரி-பெங்களூரு இடையே புதிதாக மெமு ரெயில் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த மெமு ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. அதுபற்றிய தகவல் பின்வருமாறு:-

  ேக.எஸ்.ஆர். பெங்களூரு-தர்மபுரி மெமு சிறப்பு ரெயில் (06577) இன்று முதல் தனது சேவைைய தொடங்குகிறது. இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு தர்மபுரியை ெசன்றடைகிறது.

  தர்மபுரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு சிறப்பு ரெயில் (06578) இன்று முதல் தர்மபுரியில் இருந்து தினமும் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு பெங்களூருவை வந்தடைகிறது.

  இந்த ரெயில் இருமார்க்கமாகவும் பெங்களூரு கண்டோன்மெண்ட், பெங்களூரு கிழக்கு, பையப்பனஹள்ளி, பெலந்தூர் ரோடு, கார்மேலரம், ஆனேக்கல் ரோடு, ஓசூர், கேலமங்களம், பொியநாகதுணை, ராயகோட்டை, மாரந்தஹள்ளி, பாலக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Next Story