மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 8 April 2022 2:56 AM IST (Updated: 8 April 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.

மேலூர், 

மேலூரில் உள்ள மூவேந்தர் நகரை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி பூங்கோதை (வயது 70). இவர் வீட்டின் அருகில் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கோதை அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஆசாமிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story