காரில் கடத்திய 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரியில் காாில் கடத்திய 2¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி லூர்துமாதா தெரு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் சிறு சிறு மூடைகளில் 2¼ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த சாமியார்மடத்தை சேர்ந்த பிபின் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட டிரைவரையும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story