காரில் மணல் கடத்திய டிரைவர் கைது

காரில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
காரில் மணல் கடத்திய டிரைவர் கைது
Published on

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதால், பின்தொடர்ந்து விரட்டிச்சென்று காரை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது காரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் துவாக்குடி வடக்குமலை அண்ணா சாலையை சேர்ந்த மாதவனின் மகன் அய்யனார் (வயது 19) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரின் உரிமையாளரான துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்த ரமேசை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com