சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
ஆரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
ஆரணி
ஆரணி சரக காவல் துறையும், ஆரணி நகர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும், ஆரணி நகர போக்குவரத்து காவல் துறையும், ஆரணி நகர அனைத்து வணிகர்கள் நலச் சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் ‘ஹெல்மெட்’ அணிதல் பற்றிய விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம் ஆரணி டவுன் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கியது.
சங்கத் தலைவர் எஸ். கோபி தலைமை தாங்கினார். ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி சாலை பாதுகாப்பு மாவட்ட தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் லட்சுமணன்,
ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் எம்.பழனி, எம்.பாலசுந்தரம், ஜெ.பொன்னையன், சங்க நிர்வாகிகள், ஆரணி அனைத்து வணிகர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் ராஜன் உள்பட நிர்வாகிகள் பலரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story