திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
Published on

திருப்பத்தூர்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தெழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் பேட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தெழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ந் தேதி முதல் வாரந்தேறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த ஆண் மற்றும் பெண் வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலே அல்லது தெலைபேசி வாயிலாகவே தெடர்பு கெண்டு தங்களது பெயரை பதிவு செய்து கெள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com