மேடு, பள்ளமாக இன்டர்லாக் கற்கள் பதிப்பு


மேடு, பள்ளமாக இன்டர்லாக் கற்கள் பதிப்பு
x
தினத்தந்தி 8 April 2022 8:21 PM IST (Updated: 8 April 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

மேடு, பள்ளமாக இன்டர்லாக் கற்கள் பதிப்பு

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் டி.டி.கே. சாலை உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தினமும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். ஆனால் அந்த சாலை முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்பட்டது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. ஆனால் சரியாக பதிக்காமல் மேடு, பள்ளமாக காட்சி அளித்தது. 

இதை கண்டித்து குன்னூர் அ.தி.மு.க. நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சரவணகுமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் மற்றும் வியாபாரிகள் திரண்டு வந்து சாலை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது இன்டர்லாக் கற்களை சரியாக பதிப்பதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்தார். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். 


Next Story