முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் ஆய்வு
முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வந்தார். பி்ன்னர் அலுவலகத்தை ஆய்வு செய்த அவர், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சிறுவர்- சிறுமியர் மன்றத்தை அவர் ஆய்வு செய்தார். பின்னர் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து எதிர்கால கனவுகள் குறித்து பேசினார். அப்போது பள்ளி ஆசிரியர்களை சந்தித்து மாணவர்களின் முன்னேறறப்பாதை குறித்து கலந்துரையாடினார். முத்துபேட்டை புதுத்தெரு பகுதியில் செயல்படுத்தப்பட்ட செயலி ரோந்து பணியை தணிக்கை செய்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story