திருவாரூர் தூவாயநாதர் கோவில் குடமுழுக்கு
திருவாரூர் தூவாயநாதர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர்:
திருவாரூர் கீழவீதியில் தூவாயநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றது. விழாவையொட்டி கடந்த 6-ந் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் 2-வது கால யாகசாலை பூஜை, 3-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, தூவாயநாதர் கோபுரம், பஞ்சின் மெல்லடியாள் கோபுரம், சுப்பிரமணியர் கோபுரம், அய்யப்பன் கோபுரம், சனீஸ்வர பகவான் கோபுரம், ராஜகோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் பலர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story