ஆகாய தாமரை செடிகளால் நீர் மாசுபாடு
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியில் ஆகாய தாமரை செடிகளால் நீர் மாசுபாடு அடைந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இங்கு இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர், அணை முன்பாக உள்ள ‘பிக்அப் டேம்’ என்னும் பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் வைகை அணை ‘பிக்அப் டேம்’ பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீரில் அதிக அளவில் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபாடு அடைந்து வருகிறது. எனவே தண்ணீரை மாசுபடுத்தும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story