தீயில் எரிந்து 3 குடிசை வீடுகள் நாசம்


தீயில் எரிந்து 3 குடிசை வீடுகள் நாசம்
x
தினத்தந்தி 8 April 2022 8:46 PM IST (Updated: 8 April 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

மின்கசிவு காரணமான தீயில் எரிந்து 3 குடிசை வீடுகள் நாசம்

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையை சேர்ந்த ஜாகிர் உசேன். இவருக்கு சொந்தமான 3 குடிசை வீடுகள் ஆற்றங்கரை தர்கா அருகே உள்ளது. நேற்று மின்கசிவு காரணமாக ஒரு குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ பரவி அருகில் இருந்து 2 குடிசை வீடுகளிலும் பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும்  முத்துப்பேட்டை தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீவிபத்தில் 3  குடிசை வீடுகளும் எரிந்து நாசமாகின. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
1 More update

Next Story