திங்கள்சந்தை அருகே சோகம் ஆட்டோ கவிழ்ந்து 2 வயது குழந்தை பலி


திங்கள்சந்தை அருகே சோகம் ஆட்டோ கவிழ்ந்து 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 8 April 2022 8:47 PM IST (Updated: 8 April 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை அருகே ஆட்டோ கவிழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

திங்கள்சந்தை, 
திங்கள்சந்தை அருகே ஆட்டோ கவிழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. 
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆட்டோ கவிழ்ந்தது
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஷிபுராஜன். இவருடைய மகன் ஷனவ் (வயது 2). நேற்று முன்தினம் பாட்டி பிரேமலதாவுடன், ஷனவ் ஒரு ஆட்டோவில் திங்கள்சந்ைத நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை வினுக்குமார் (40) என்பவர் ஓட்டினார்.
பூச்சாஸ்தான்விளை என்ற இடத்தில் வந்த ேபாது ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. 
2 வயது குழந்தை சாவு
இந்த விபத்தில் ஷனவ்வின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தை ஷனவ்வை மீட்டு நெய்யூரில் உள்ள ஓரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஷனவ்வுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், ஆட்டோ டிரைவர் வினுக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
ஆட்டோ கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story