பூமாலை தலைப்பாகை அணிந்து பாரிவேட்டை நடத்திய இளைஞர்கள்
திண்டுக்கல் அருகே நடந்த வினோத திருவிழாவில் பூமாலை தலைப்பாகை அணிந்து இளைஞர்கள் பாரிவேட்டை நடத்தினர்.
கோபால்பட்டி:
திண்டுக்கல் அருகே நடந்த வினோத திருவிழாவில் பூமாலை தலைப்பாகை அணிந்து இளைஞர்கள் பாரிவேட்டை நடத்தினர்.
வினோத திருவிழா
திண்டுக்கல் அருகே ஆண்டியப்பட்டியில் பிரசித்திபெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த ஒருவார காலமாக நடந்து வந்தது. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பாரிவேட்டை நேற்று முன்தினம் நடைபெற்றது.
பண்டைய காலத்தில் காட்டுக்குள் புலி வேட்டைக்கு செல்வது போன்று பாரம்பரிய உடை அணிந்தும், கழுத்தில் பூமாலை, தலைப்பாகை அணிந்தும் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் கம்பு, அம்பு, ஈட்டியுடனும், அதில் ஒருவர் வேட்டை பாதுகாப்புக்காக கருப்புசாமி வேடமிட்டு கையில் அரிவாளுடனும் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர் மந்தையை சுற்றி வந்தனர். அவர்களுக்கு முன்பு 2 பேர் புலி வேடமிட்டபடி சென்றனர்.
பின்னர் புலி வேடமிட்டு செல்பவர்கள் மீது வேட்டைக்கு சென்றவர்கள் அம்பை எய்து புலியை கொல்வது போன்ற பாவனைகளை செய்து பாரிவேட்டை நிகழ்ச்சியை நடத்தினர்.
ரத்த பொங்கல்
இதுதவிர திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு கிராமமக்கள் சார்பில் முனியப்பசாமிக்கு பொங்கல் வைத்து, ஆடு பலியிடப்பட்டது. பின்னர் பொங்கலை ஒரு பெரிய உருண்டையாக பிடித்து, அதனுடன் ஆட்டின் ரத்தத்தை கலந்து, அதனை கோவிலின் அருகே உள்ள முனியப்பன் சாமியாக வழிபடும் புளிய மரத்தின் மீது சூறையிட்டனர். அந்த புளியமரத்தில் உள்ள முனியப்பசாமி, சூறையிடப்படும் ரத்த பொங்கலை சாப்பிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வினோத திருவிழாவில் ஆண்டியப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story