காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வங்கி காசாளர் கைது


காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வங்கி காசாளர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 10:14 PM IST (Updated: 8 April 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வங்கி காசாளர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). செம்பனார்கோவிலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வரும் இவர், மயிலாடுதுறையை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். நெருங்கிப் பழகி வந்த அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
 இந்தநிலையில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேசிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
காசாளர் கைது
அந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், பெண்ணிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். பின்னர் அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story