அரசு பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி
அரசு பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.
காளையார்கோவில்,
மறவமங்கலம் அருகே மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த உடையார் என்பவரது மகன் முத்துசாமி (வயது36). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை மறவமங்கலத்தில் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துச்சாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள வயல் வெளியில் இறங்கி நின்றுவிட்டது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அரசு பஸ் ஓட்டுனர் சத்தியேந்திரன் மீது காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story