கடலூர் அருகே 120 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் 2 பேர் கைது

கடலூர் அருகே 120 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்த போலீசா இது தொடாபாக 2 பேரை கைது செய்தனா.
கடலூர் அருகே 120 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் 2 பேர் கைது
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வழுதலம்பட்டு பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று வழுதலம்பட்டு பகுதியில் உள்ள வாழை தோட்டங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு வாழை தோட்டத்தின் நடுவில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு ஒரு கேனில் சாராயமும் இருந்தது. இதையடுத்து சாராய ஊறல் வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த முருகன் என்கிற ஆறுமுகம் (வயது 55), சக்திவேல் (55) ஆகியோர் தான் சாராய ஊறல் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 120 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com