புலிவலம் கிராமத்தில் ஊட்டச்சத்து இருவார நிறைவு விழா


புலிவலம் கிராமத்தில் ஊட்டச்சத்து இருவார நிறைவு விழா
x
தினத்தந்தி 8 April 2022 11:02 PM IST (Updated: 8 April 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

புலிவலம் கிராமத்தில் ஊட்டச்சத்து இருவார நிறைவு விழா நடந்தது.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் ஊட்டச்சத்து இரு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. சோளிங்கர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி தலைமை தாங்கினார். வட்டார குழந்தை வளர்ச்சி மேற்பார்வையாளர்கள் ஜமுனா, மனோன்மணி விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, ரத்த சோகை, பாரம்பரிய உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும், கார்பிணிகள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசிம் குறித்து விளக்கினார். 

பின்னர் பாரம்பரிய உணவு தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், நீர் மேலாண்மை குறித்தும் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் திருமலை, டாக்டர்கள் சசிரேகா, கோபிநாத், வேளாண்துறை பாலாஜி, பிரேம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story