ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குடிநீர் பணிகள் செய்ய ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குடிநீர் பணிகள் செய்ய ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாகராஜ், ஊராட்சி உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை குடிநீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோரின் ஆணைப்படி, 2021- 2022, 2022-2023-ம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்கு வரப்பெற்ற 15-வது மத்திய நிதி குழு மானியத் திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மாவட்டம் முழுவதும் குடிநீர் பணிகளை தேர்வு செய்து, மாவட்ட கலெக்டர் மூலம் நிர்வாக அனுமதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story