கிருஷ்ணகிரி துர்க்கையம்மன் கோவிலில் நவசண்டி யாகம்


கிருஷ்ணகிரி துர்க்கையம்மன் கோவிலில் நவசண்டி யாகம்
x
தினத்தந்தி 8 April 2022 11:24 PM IST (Updated: 8 April 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி துர்க்கையம்மன் கோவிலில் நவசண்டி யாகம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகர் போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில், உலக மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்கிடவும், உலக மக்கள் ஆரோக்கியமாக வாழவும் வேண்டி, நவசண்டி மகா யாகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனையும், மாலை கலச பூஜை, குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது. இரவு, மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நவசண்டி மகா யாகமும், தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story