

விருதுநகர்,
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் இவர்கள் சார்பில் விருதுநகர் இளஞ்சிறார் நீதி குழுமத்தின் முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவர்களை ஜாமீனில்விட ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனாலும் விருதுநகர் இளஞ்சிறார் நீதி குழுமம், 4 மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.