அரூரில் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து மாயமான பணத்தில் ரூ30 ஆயிரம் மீட்பு
அரூரில் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து மாயமான பணத்தில் ரூ.30 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் பிரேம்சந்தர். தொழிலாளி. இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கி கணக்கை 24 மணி நேரத்தில் அப்டேட் செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய அவர் அதிலிருந்த இணைப்பை கிளிக் செய்து தன்னுடைய வங்கி கணக்கின் விவரங்கள் மற்றும் ஓ.டி.பி. எண்களை பதிவு செய்தார். சற்று நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 2 தவனைகளாக ரூ.55 ஆயிரம் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இழந்த பணத்தை மீட்டு தர கோரி சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ அழைத்து புகாரை பதிவு செய்தார். இதுதொடர்பாக தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வங்கியை தொடர்பு கொண்டு ரூ.30 ஆயிரத்தை மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பிரேம்சந்தரிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story