கோவில் உண்டியல் திருட்டு


கோவில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 8 April 2022 11:30 PM IST (Updated: 8 April 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியல் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே உள்ளது பருத்திக்காட்டு வலசை. இந்த ஊரில் பெரியகூனியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படவில்லையாம். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல பூஜைகள் முடிந்து கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது உண்டியலை யாரோ திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து பால்கரசு (55) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story