பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்


பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 8 April 2022 11:56 PM IST (Updated: 8 April 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உலக பிரசித்திபெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள மகிஷா சூரவர்த்தினிக்கு பங்குனி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மாரியம்மன் கோவிலில் தொடங்கிய பால்குடம் ஊர்வலமானது முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டி காளி நடனம் ஆடி வீதியில் சென்றனர். இதனை பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.வெளியூர்களிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story