பிள்ளாநல்லூரில் இறைச்சி கடையில் கோழி திருடியவர் கைது


பிள்ளாநல்லூரில் இறைச்சி கடையில் கோழி திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 11:58 PM IST (Updated: 8 April 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

பிள்ளாநல்லூரில் இறைச்சி கடையில் கோழி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூரில் பழனியப்பன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது கடையில் இரவு நேரத்தில் கோழிகள் திருடப்பட்டு வந்தன. இதனால் பழனியப்பன் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினார். இந்தநிலையில் சம்பவத்தன்று இவரது கடையில் ஒருவர் கோழிகளை திருடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அவர் புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோழிகளை திருடியதாக மாமுண்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 43) என்பவரை கைது செய்தனர்.

Next Story