சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி சுந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது 4 எம்.எல்.ஏக்கள் என கணக்கை தொடங்கி உள்ளோம். அடுத்ததாக 44 ஆகவும், அதற்கடுத்தது 144 எம்.எல்.ஏ.க்களை பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும். நடுத்தர மக்களுக்கு தேவையான கல்வி, குடிநீர், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்துதான் தி.மு.க.வினர் ஆட்சியை தக்க வைத்து கொண்டிருக்கின்றனர். வரக்கூடிய எந்த தேர்தலிலும் தி.மு.க.விற்கு வாக்களிக்கக்கூடாது என்பதை நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டால் மட்டுமே, தமிழகத்திற்கு விடிவு கிடைக்கும், என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ், துணைத்தலைவர் செல்வம், செயலாளர் டைம்ஸ் சக்தி உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story