சேலத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து சேலத்தில் நேற்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:-
சொத்து வரி உயர்வை கண்டித்து சேலத்தில் நேற்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது. இதில் நிர்வாகிகள் மணிகண்டன், சுதிர்முருகன், சத்தியமூர்த்தி, அண்ணாதுரை, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரி குறைப்பு
மாநகராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. மாநகராட்சியில் தீர்மானம் போட்டுதான் சொத்து வரியை உயர்த்த முடியும். ஆகையால் சொத்துவரி உயர்வை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். தேர்தலில் தி.மு.க.வினர் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். அதனை ஈடுகட்ட வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல் மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் ரூ.25 வரை விலை குறையும். மேலும் தமிழகத்தை விட பெங்களூருவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவு ஆகும். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அங்கு சென்று டீசல் போடுகின்றனர். இதனால் தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story