

காட்டுப்புத்தூர்:
காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூர் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் மதுரையில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(39). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, நாகையநல்லூரைச் சேர்ந்த வையாபுரி மற்றும் அவரது உறவினர்கள் மகேஸ்வரி வீட்டின் அருகில் பாதை சந்து பிரச்சினை தொடாபாக மகேஸ்வரியிடம் தகராறு செய்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பற்றி தகவல் அறிந்து மதுரையில் இருந்து ஊருக்கு வந்த ரமேசை தொட்டியத்தில் வையாபுரி மற்றும் அவரது உறவினர்களான சக்திவேல், சவுந்தரராஜன், தனபால், பெரியசாமி, முதல்வியா, வான்மதி, காந்திமதி, லலிதா, தமிழ்மணி, பூங்கொடி, மாரியாயி, சின்னபிள்ளை, ராமச்சந்திரன் மற்றும் சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ரமேஷ் காட்டுப்புத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 15 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.