உலக சுகாதார தின விழா


உலக சுகாதார தின விழா
x
தினத்தந்தி 9 April 2022 5:21 AM IST (Updated: 9 April 2022 5:21 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா நடந்தது.

செங்கோட்டை:
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வக நுட்புனர் ஹரிஹர நாராயணன் வரவேற்று பேசினார். மகப்பேறு டாக்டர் கிருத்திகா ஷைலினி பேசினார்.
மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் அனைவரும் உலக சுகாதார தின உறுதிமொழி ஏற்றனர். சுற்றுப்புறச் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மருந்தாளுனர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார்.

Next Story