தாம்பரம் போலீஸ் நிலையத்தில் எலி மருந்து குடித்த பெண் போலீஸ் ஏட்டு


தாம்பரம் போலீஸ் நிலையத்தில் எலி மருந்து குடித்த பெண் போலீஸ் ஏட்டு
x
தினத்தந்தி 9 April 2022 4:35 PM IST (Updated: 9 April 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திட்டியதால் எலி மருந்து குடித்த பெண் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தாம்பரம்,

திருநீர்மலையைச் சேர்ந்தவர் செண்பகம் (வயது 35). இவர் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் செண்பகம் நேற்று திடீரென போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடைக்கு சென்று எலிமருந்து வாங்கி வந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

இதில் மயங்கி விழுந்த அவர், மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அலுவலக பணியை செய்து முடிக்காததால் சக போலீசார் முன்னிலையில் ஏட்டு செண்பகத்தை அதிகாரி திட்டியதாகவும், அதனால் மன முடைந்த அவர் எலிமருந்தை குடித்ததாகவும் கூறப்படுகிறது.

Next Story