கிரிவலப்பாதையில் சேதமான மர சிற்பங்கள் சீரமைப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதமான மர சிற்பங்கள் சீரமைக்கும் பணி தொடங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதமான மர சிற்பங்கள் சீரமைக்கும் பணி தொடங்கியது.
மர சிற்பங்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். கிரிவலப்பாதையில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மரம், செடிகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களில் அழகிய மர சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
போதிய பராமரிப்பு இன்றி சில மர சிற்பங்களில் சேதங்கள் ஏற்பட்டன. எனவே கிரிவலப்பாதையில் உள்ள மர சிற்பங்களை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தர மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
சீரமைக்கும் பணி
அதனை கருத்தில் கொண்டு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் படி நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிரிவலப்பாதையில் மர சிற்பங்கள் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
இந்த பணியில் மதுரை சேர்ந்த மர சிற்பி மணிகண்ட ராஜா தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கிரிவலப்பாதையில் 50 மர சிற்பங்கள் உள்ளன. இதில் 10 சிற்பங்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.
மீதமுள்ள 40 சிற்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சித்ரா பவுர்ணமிக்கு முன்னர் இந்த பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றது என்றனர்.
Related Tags :
Next Story






