திருத்துறைப்பூண்டியில் மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலம்


திருத்துறைப்பூண்டியில் மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 10 April 2022 12:15 AM IST (Updated: 9 April 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டியில் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலம் நடந்தது. 

விலை உயர்வு

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலம் நடந்தது. திருத்துறைப்பூண்டி அண்ணா சிலையில் இருந்து தொடங்கி ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஆட்டோ சங்க நகர தலைவர் ஆரோக்கியராஜ், நகர செயலாளர் பாரதிதாசன், நகர பொருளாளர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கோஷம் எழுப்பினர்

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க ஒன்றிய பொருளாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story