வெங்காயபள்ளி ஊராட்சியில் மர்ம நோய் தாக்கி 2 மாடுகள் சாவு
வெங்காயபள்ளி ஊராட்சியில் மர்ம நோய் தாக்கி 2 மாடுகள் இறந்தன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா வெங்காயபள்ளி ஊராட்சி பனமரத்து வட்டம் பகுதியில் திடீரென மர்ம நோய் தாக்கி கணேசன் என்பவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் உயிரிழந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் இந்த மாதம் மட்டும் 15 மாடுகள் இறந்து உள்ளது. இந்த பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி போட யாரும் வரவில்லை. மாடுகளுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாக கூறினாலும் டாக்டர்கள் யாரும் வருவதில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கால்நடைமருத்துவர் சத்யா ஆகியோர் சென்று பார்வையிட்டு உடனடியாக கால்நடை உதவி இயக்குனருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இந்தப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story